அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவின் 45வது அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்!


அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.

அதிக பரபரப்புகளுக்கு இடையே இந்த தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் 276 எலக்டொரல் ஓட்டுகள் பெற, ஹிலரி 218 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்க்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

கருத்துக்கணிப்புகள் மாறி மாறி வந்து தேர்தல் களத்தில் பரபரப்பை அதிகரித்தது.

அமெரிக்க ஆட்சி நிர்வாகத்தில் நேர்மையை மீட்டெடுப்பதுதான் தற்போது உள்ள மிகப்பெரிய சவால் என்று தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போது டொனால்ட் டிரம்ப் கூறினார்.

அமெரிக்க அதிபரா டிரம்ப் செய்யப்போகும் சாதனை என்ன? என்று உலகமே எதிர்பார்த்துக்கொண்டுள்ளது


அமெரிக்காவின் 45வது அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்! Reviewed by Author on November 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.