அண்மைய செய்திகள்

recent
-

முசலிப்பிரதேத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட.....


மன்னார் மாவட்டத்தின் பிரதானமான கிராமங்களில் ஒன்றானா முசலிப்பிரதேத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
முசலி பிரதேசத்திற்குட்டபட்ட கிராமங்களான கொண்டச்சி காயாக்குழி சிலாவத்துறை முள்ளிக்குளம் உட்பட 10கிராமத்தினை சேர்ந்த மக்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் காரணம் என்ன தெரியுமா….

பிரதான காயாக்குழி கொண்டச்சியில் உள்ள மக்களின் கடல்தொழிலாக வாழ்வாதாரத்தினை மேற்கொண்டுள்ளனர் இவர்களின் தொழிலினையும் அதாவது சிறிய அளவிலான கப்பல்களையே பயன்படுத்தி கடற்றொழிலை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தினை நிறைவு செய்து வரும் மீனவக்குடும்பங்களுக்கு பெரும் பிரச்சினையாகவுள்ள விடையம் பருவகாலமீன்பிடிக்கு என தென்னிலங்கையில் இருந்து வரும் மீனவர்கள் பெருமளவிலான பாரிய கப்பல்கள் வலைகளுடன் வந்து மீன்பிடியில் ஈடுபடுவதோடு
கிராமமக்களின் சொந்த வாடிகளையும் மீன்பாடுகளையும் ஆக்கரமிப்பதோடு இவர்களின் தொழில்தன்மையினையும் வருமானத்தினையும் பறிப்பதோடு மெல்ல சுரண்டுவதால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

10கிராமங்களைச்சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட இரண்டு காரணங்கள் ஒன்று மீன்பிடிவளம் சுரண்டப்படுதலையும் தமக்கான ஒழுங்கான மீள்குடியேற்றமின்மையினை எதிர்த்தும் இரண்டிற்கும் நல்ல தீர்வைப்பெற்றுத்தருமாறு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு  எழுதிய மகஜர் ஒன்றை பிரதேசசெயலாளலர்  திரு.S.கேதீஸ்வரன்அவர்களிடம் கையளித்தனர் அந்த மகஜரின் பிரதியினை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாரளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடமும் வடமாகாணசபை உறுப்பினர்களான மருத்துவர் குணசீலன்  றிப்கான் பதியுதீன் அவர்களிடமும் கையளிக்கப்பட்டதுள்ளது… மேலும் வடமாகாண அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் அனைவருக்கும் மகஜர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது...











முசலிப்பிரதேத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட..... Reviewed by Author on November 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.