ரூ.6000 கோடி கருப்பு பணத்தை அரசிடம் ஒப்படைத்தார் குஜராத் வைர வியாபாரி..!
வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாத கருப்பு பணம் சுமார் 6,000 கோடி ரூபாயை குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், அரசிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்தியாவில் கறுப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனால் வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாமல் பணத்தை பதுக்கி வைத்த நபர்கள் அரசிடம் சிக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் என்பவர், தன்னிடம் இருந்த ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த தொகைக்கான வட்டி என்று ரூ.1800 கோடியும், வரியின் மீது 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்பதால் ரூ.3600 கோடி வரி செலுத்த வேண்டும். அப்படி பார்த்தால் ஒட்டுமொத்தமாக ரூ.5400 கோடி வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது. இதனால் லால்ஜிபாய்க்கு ரூ.600 கோடி மட்டுமே மிஞ்சும்.
தாமாக முன்வந்து ரூ.6000 கோடிகருப்பு பணத்தை அரசிடம் ஒப்படைத்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
ரூ.6000 கோடி கருப்பு பணத்தை அரசிடம் ஒப்படைத்தார் குஜராத் வைர வியாபாரி..!
Reviewed by Author
on
November 15, 2016
Rating:

No comments:
Post a Comment