'உலக சலரோக' தினத்தையொட்டி மன்னாரில் விழிப்புணர்வு ஊர்வலம்-Photos
'உலக சலரோக' தினத்தையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாரில் விழிப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றது.மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்ற நோய் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றது.
குறித்த ஊர்வலத்தில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி ரதனி யூட்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி ரஜனி அன்ரன் சிசில், தொற்ற நோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் அன்ரன் சிசில் ஆகியோர்; கலந்து கொண்டனர்.
தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்து இன்று காலை 8 மணியிக்கு ஆரம்பமான குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.
பின் குறித்த ஊர்வலம் மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியூடாக மீண்டும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையை சென்றடைந்தது.
குறித்த ஊர்வலத்தில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணியாளர்கள், வைத்தியார்கள், சுகாதார தொண்டர்கள்,பாடசாலை மாணவர்கள்,தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள்,மருத்துவ மாதுக்கள் என பலர் கலந்து கொண்டு 'உலக சலரோக' தினத்தையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
'உலக சலரோக' தினத்தையொட்டி மன்னாரில் விழிப்புணர்வு ஊர்வலம்-Photos
Reviewed by NEWMANNAR
on
November 15, 2016
Rating:
No comments:
Post a Comment