திருக்கேதீச்சரம் சுந்தரர் ஆதீனம் மன்னாரில் நிறுவ முடிவு-Photos
சிவபூமியான ஈழத்தில் தொன்மை மிகு பஞ்ச ஈச்சங்களில் ஒன்றும் பாடல் பெற்ற சிவாலயமுமான திருக்கேதீச்சரம் அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தில் சைவத் தமிழர்களுக்கு ஆதீனம் ஒன்று பெருங்குறையை நிவர்த்திக்கும் வண்ணம் நேற்று திருக்கேதீச்சரத்தில் நடைபெற்ற நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட சிவசேனைக் கூட்டத்தில் ஆதீனம் ஒன்று அமைத்தல் தொடர்பாக ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணத்தின் நல்லை ஆதீனம் திருகோணமலையின் தென் கயிலை ஆதினம் போன்று மன்னாரின் திருக்கேதீச்சரம் சுந்தரர் ஆதினமும் சைவ சித்தாந்த மரபை முதன்மை படுத்தி அமைக்கப்பட்டுள்ளது
திருக்கேதீச்சரத்தை சமய குரவர்களான சம்பந்தரும் சுந்தரரும் பாடியுள்ள நிலையில் சம்பந்தருடைய பெயரில் யாழ்ப்பாணத்தில் ஆதீனம் இருக்கின்ற நிலையில் சைவத் தமிழ் உலகில் முதன் முறையாக சுந்தரர் பெயரில் ஆதீனம் ஒன்று சைவர்களின் தேன் போந்து என நாவலர் வர்ணித்த மன்னார் திருக்கேதீச்சரத்தில் அமையப் பெற விருகின்றது
எதிர்வரும் பெளர்ணமி திருக்கார்த்திகை தீபத்தன்று (விளக்கீடு) மன்னாரைச் சார்ந்த ஆன்மீகப் பணியாற்றும் துறவி ஒருவர் திருக்கேதீச்சரப் பெருமான் முன்னிலையில் பட்டாபிசேகம் செய்யப்படவுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.
திருக்கேதீச்சரம் சுந்தரர் ஆதீனம் மன்னாரில் நிறுவ முடிவு-Photos
Reviewed by NEWMANNAR
on
November 15, 2016
Rating:

No comments:
Post a Comment