அதிஉயர் இராணுவ பலத்துடன் முல்லைத்தீவு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிஉயர் இராணுவ பலத்துடன் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதி மற்றும் முல்லைத்தீவு - பரந்தன் பிரதான வீதி ஊடாக பயணிக்கும் போது நிலையான பலம் பொருந்திய இராணுவ முகாம்கள் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இராணுவத்தினரின் போக்குவரத்து வாகனங்களின் பயன்பாடுகளும் அதிகமாக காணப்படுகின்றதாகவும், ஒரு சிவில் வாகனத்திற்கு இரண்டு இராணுவ வாகனங்கள் என்னும் வீதத்தில் தினமும் வலம் வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதே நேரம் பொது இடங்களில் பொதுமக்கள் முப்படை வீரர்கள் பொலிஸார் அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் கலந்து பயணிக்கும் முதலாவது மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டமாக கணிக்கப்பட்டுள்ளது.
அதிஉயர் இராணுவ பலத்துடன் முல்லைத்தீவு!
Reviewed by Author
on
November 16, 2016
Rating:

No comments:
Post a Comment