இலங்கை கடற்பரப்பினுள் வைத்து கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் ஜனவரி 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் பதில் நீதவான் உத்தரவு.-Photos
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ இன்று (21) உத்தரவிட்டார்.
இலங்கை கடல் பகுதியில் அத்து மீறி நுழைந்து இரண்டு படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களை இன்று (21) புதன் கிழமை அதிகாலை கைது செய்த கடற்படையினர் குறித்த மீனவர்களை மன்னார் தாழ்வுபாடு கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த மீனவர்களை தாழ்வுபாட்டு கடற்படையினர் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த மீனவர்கள்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களிடம் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலையில் அஜர் படுத்தினர்.
விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் குறித்த 12 மீனவர்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பினுள் வைத்து கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் ஜனவரி 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் பதில் நீதவான் உத்தரவு.-Photos
Reviewed by NEWMANNAR
on
December 21, 2016
Rating:
No comments:
Post a Comment