மன்னார் அரச சுற்றுலா விடுதியை திறந்து வைத்தார் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன-Photos
உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு சொந்தமான மன்னார் அரச சுற்றுலா விடுதி இன்று புதன் கிழமை(21) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்ற திறப்பு விழா நிகழ்வின் போது உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் அவர்களும் கலந்து கொண்டு திறந்துவைத்தார்.
இதனைத்தொடர்ந்து இடம் பெற்ற நிகழ்வின் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கடமையாற்றுகின்ற அனைத்து கிராம அலுவலகர்களுக்கும் அலுவலக பை வைபவ ரீதியாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன்,சர்வமதத்தலைவர்கள், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், திணைக்களத்தலைவர்கள்,பிரதேசச் செயலாளர்கள், கிராம அலுவலகர்கள் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் அரச சுற்றுலா விடுதியை திறந்து வைத்தார் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன-Photos
Reviewed by NEWMANNAR
on
December 21, 2016
Rating:
No comments:
Post a Comment