அண்மைய செய்திகள்

recent
-

பெண்ணை வெட்டிக்கொன்ற கொள்ளையன் கைதானான்


குடத்தனைப் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரை வெட்டிக்கொலை செய்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையிட்ட கொள்ளையனைத் தாம் கைது செய்துள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொற்பதி, குடத்தனைப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு
தங்கவேல் பரமேஸ்வரி (வயது-62) என்ற பெண்ணை வெட்டிக்கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இது தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் ஜெயலத்தின் வழிநடத்தலில் குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி ஆனர் மற்றும் ரமணன் ஆகியோர் மேற்கொண்ட புலன் விசாரணையின் அடிப்படையில் கொலை நடந்த வீட்டிற்கு அருகாமையில் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை மீட்ட பொலிஸார் அதன் அடிப்படையில் மோப்ப நாயின் உதவியுடன் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரைக் கைது செய்துள்ளனர்.

இதேவேளை நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை பதில் நீதிபதி பா.சுப்பிரமணியம் விசாரணைகளை மேற்கொண்டதனடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை மேற்கொண்ட தில் ஆழமான வெட்டுக்காயத்தால் குருதிப் பெருக்கு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டது.
பெண்ணை வெட்டிக்கொன்ற கொள்ளையன் கைதானான் Reviewed by NEWMANNAR on December 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.