10 வினாடிகளில் 19 அடுக்குமாடி கட்டிடங்களை வெடிவைத்து தகர்த்த சீனா: காரணம் என்ன?
சீனாவில் ஹூபேமா மாகாணம் ஹன்கூ நகரில் அமைந்துள்ள பழமையான அடுக்கு மாடி கட்டிடங்களை வெடி வைத்து தகர்த்து அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிட்டுள்ளனர்.
ஹன்கூ நகரில் 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த 19 கட்டிடங்களில் 600 கிலோ அளவுக்கு வெடிபொருட்கள் நிரப்பப்பட்டன. அவை கட்டிடங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் நள்ளிரவில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தகர்க்கப்பட்டது. அதையடுத்து 10 வினாடிகளில் 19 அடிக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
குறித்த பகுதியில் அமைந்துள்ள கட்டிடங்கள் அனைத்தும் 7 முதல் 12 மாடிகளை கொண்டவை என கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று 707 மீற்றர் உயரம் கொண்டது. இது உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக இருந்தது.
ஹூபேமா மாகாணத்தில் அமைந்துள்ள ஹன்கூ ஒரு வர்த்தக நகரமாகும். இங்கு இதுவரை 32 அடுக்குமாடி கட்டிடங்கள் இதே போன்று வெடி வைத்து நகர்க்கப்பட்டுள்ளது.
தற்போது சீனாவில் ஒரே நேரத்தில் இது போன்று அதிக கட்டிடங்கள் இடித்து தகர்க்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். அதற்கான பணி 4 மாதங்கள் நடைபெற்றதாக சீன பொறியியல் அகாடமி நிபுணர் வாங்ஸுகுயாங் தெரிவித்தார்.
10 வினாடிகளில் 19 அடுக்குமாடி கட்டிடங்களை வெடிவைத்து தகர்த்த சீனா: காரணம் என்ன?
Reviewed by Author
on
January 25, 2017
Rating:

No comments:
Post a Comment