கருத்தரிக்க எத்தனை விந்தணுக்கள் தேவைப்படும் தெரியுமா?
முந்தைய காலத்தில், பெண்கள் கருவுற்றிருப்பதை அவர்களுக்கு ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி, சாம்பல், புளிப்புச் சுவை சாப்பிடுவதை விரும்புவது இது போன்ற பல அறிகுறிகளை வைத்து தான் அவர்கள் கருவுற்று இருக்கிறார்கள் என்று கூறுவார்கள்.
இவை அனைத்தும் கர்ப்ப கால அறிகுறிகள்தான். ஆனால் தற்போது கர்ப்பத்தை அறிவதற்கு எளிதான கருத்தரிப்பு பரிசோதனை உள்ளது. இருப்பினும் கருத்தரிப்பை பற்றிய ஆய்வுகள் ஏதும் இல்லை.
பொதுவாக பல தம்பதிகளுக்கு கருத்தரிப்பு என்பது எளிதாக நடந்து விடுகிறது.
ஆனால், தம்பதிகள் கருத்தரிப்பதற்கான மருத்துவ பரிசோதனை செய்யும் போது தான், கருத்தரிக்க எத்தனை விடயங்கள் சரியாக இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிகின்றது.
கருத்தரிப்பிற்கு எத்தனை விந்தணுக்கள் தேவைப்படும்?
கருத்தரிப்பு ஏற்படுவதற்கு, ஆணின் விந்தில் 20 மில்லியன் உயிரணுக்கள் இருக்க வேண்டும். ஆனால் அதிலும் 70 சதவீதத்திற்கு மேலாவது விந்தணுக்கள் உயி்ருடன் இருப்பது மிகவும் அவசியமாகும்.
அந்த விந்தணுக்களில் 50 சதவீதமாவது ஊர் ந்து செல்லும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்த எண்தணிக்கையின் அளவு குறையும் பட்சத்தில் தான் கருத்தரிப்பு ஏற்படாமல் போகிறது.
எனவே கருவுறுதல் நடைபெறாமல் போவதற்கு, ஆண்களை பொருத்தவரை அவர்களின் உயிரணுக்கள் குறைவாக இருப்பதும், உயிரணுவே இல்லாமல் இருப்பதும் தான் காரணமாகிறது.
கருத்தரிக்க எத்தனை விந்தணுக்கள் தேவைப்படும் தெரியுமா?
Reviewed by Author
on
January 25, 2017
Rating:
Reviewed by Author
on
January 25, 2017
Rating:


No comments:
Post a Comment