உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு! - சிவசக்தி ஆனந்தன்
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில் வவனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்தால் அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை மீளாய்வுசெய்ய வேண்டிவருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எச்சரித்தார்.
திறைசேரிமுறி மோசடி குறித்த கோப் குழுவின் அறிக்கை பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்றாதுள்ளது. இது விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்கின்றார் என்பதற்காக ஒட்டுமொத்த கூட்டமைப்பினரோ அல்லது தமிழ் மக்களோ சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வார்களென கருதக்கூடாது.
யுத்த காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆளும் கட்சியில் உள்ள எவருக்காவது கூற முடியுமா?
மாறி ,மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஆணைக்குழுக்களை அமைப்பது, அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குப்பைத் தொட்டிக்குள் போடப்படுகின்றமை என்பதே நீடித்து வருகிறது. காணாமல் போனவர்கள் குறித்து ஆராய கடந்த அரசு குழுவொன்றை அமைத்திருந்தது. இக்குழுவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சாட்சியமளித்திருந்தனர். இந்த சாட்சிகள் தற்பொழுது குப்பையில் போடப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதில் பெண்கள் மற்றும் வயதானவர்களே கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். காணாமல் போனவர்களின் உறவுகள் உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவிலேயே தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.என்றும் அவர் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
January 25, 2017
Rating:

No comments:
Post a Comment