எலிசபெத் மகாராணியை சுட்டுக் கொல்ல முயன்ற பாதுகாப்பு அதிகாரி,,,
பிரித்தானியா ராணி இரண்டாம் எலிசபெத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில வருடங்கள் முன்னர் பக்கிங்காம் அரண்மனையில் நள்ளிரவு 3 மணியில் நபர் ஒருவர் உலாவிக் கொண்டிருந்துள்ளார்.
இதை கவனித்த பாதுகாப்பு அதிகாரி, குறித்த மர்ம நபரை தடுத்து நிறுத்துவதற்காக தனது துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார்.
பின்னர் தான் தெரியவந்தது அவர் மகாராணி எலிசபெத் என்று, தனது செயலுக்கு பாதுகாப்பு அதிகாரி வருத்தம் வெளியிட்டுள்ளார்.
இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டதால், தூய்மையான காற்றை சுவாசிக்க வெளியே வந்ததாக மகாராணி எலிசபெத் குறிப்பிட்டுள்ளார்.
உடல்நலக் குறைவால் அவதிப்படும் மகாராணி சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகள், விசேட பிரார்த்தனைகளை தவிர்த்து வருகிறார்.
இந்த சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு நடந்தாலும், தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எலிசபெத் மகாராணியை சுட்டுக் கொல்ல முயன்ற பாதுகாப்பு அதிகாரி,,,
Reviewed by Author
on
January 05, 2017
Rating:

No comments:
Post a Comment