அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு சவால் விடுக்கும் இயற்கை...! கைகொடுத்து காப்பாற்றும் சர்வதேச அமைப்பு


வரட்சியால் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ள தமது அமைப்பு பூரண ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்க உலக உணவுத் திட்டம் முன்னிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எதரின் கோசின் (Ertharin Cousin) இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமாக சுவிஸர்லாந்துக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உலக பொருளாதார மாநாட்டு மத்திய நிலையத்தில் வைத்து எதரின் கோசினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில், அடுத்த மாதமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாகவும் எதரின் கோசின் (Ertharin Cousin) குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது மேலும் பல விடயங்கள் குறித்து கலந்துரையாட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் இலங்கை முகம்கொடுக்கக் கூடிய வரட்சியான காலநிலையால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் சிரமங்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், வரட்சியான காலநிலை காரணமாக எதிர்கால நுகர்வுக்கான அரிசி மற்றும் மின்சார உற்பத்திக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படும் என பிரதமர் இதன்போது உலக உணவுத் திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளரிடம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு சவால் விடுக்கும் இயற்கை...! கைகொடுத்து காப்பாற்றும் சர்வதேச அமைப்பு Reviewed by Author on January 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.