அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் 10ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவார் என்ற மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் ஆச்சரியமான வெற்றி உலகமெங்கிலுமுள்ள ஜனநாயகப் பற்றாளர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
அரசியல் அனுபவம் இல்லாத ஆனால், பெரும் செல்வந்தரான டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈராக், போன்ற பல நாடுகளுடன் அமெரிக்காவுக்குள்ள பதற்ற நிலையை தணிக்கும் வகையிலான அரசியல் செய்வாரா அல்லது நிலைமையை இன்னும் மோசமாக்குவாரா என்ற அங்கலாய்ப்பில் அமெரிக்க மக்களும் உலகமும் இருக்கின்ற ஒரு நிலைமைதான் காணப்படுகின்றது.
இவர் ஏற்கனவே ஊடகவியலாளர்கள்., விமர்சகர்கள் என பலரைக் கண்டித்துப் பேசியிருப்பதனால் தனது பதவிக் காலத்தின் போது ஜனநாயக விரோத போக்கையே கடைப்பிடிப்பார் என்ற பரவலான எண்ணமும் இருக்கிறது.
அமெரிக்காவிலுளள முஸ்லிம்களை வெளியேற்றப் போவதாக இவர் அதிரடியாக வெளியிட்ட கருத்து உலகமெங்கும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது.
அமெரிக்கா இஸ்லாமிய தேசம் என்ற பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள போதும் அவருடைய இந்த திடீர் அறிவிப்பால் அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளில் பெரும் விரிசல் தோன்றக் கூடிய சாத்தியம் இருக்கிறது.
எப்படியோ டிரம்ப் அறிவித்தபடி நடந்து கொள்வாரா அல்லது பதவியேற்ற பின்னர் மாறிவரும் உலக அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கேற்ப தனது அரசின் கொள்கைகளை சரிசெய்து கொள்வாரா என்பதைத்தான் ஜனநாயக உலகம் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறது.
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு
Reviewed by Author
on
January 20, 2017
Rating:

No comments:
Post a Comment