அண்மைய செய்திகள்

recent
-

பொங்கல் விழாவின்போது .....பண்பாடு பற்றிய கிறிஸ்தவத்தின் பார்வை -அருட்திரு.தமிழ நேசன் அடிகளார்


கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியின் மெய்யியல் துறையில் இடம்பெற்ற பொங்கல் விழாவின்போது (14.01.2017) தமிழ் மற்றும் சிங்களக் குருக்களுக்கும் குருத்துவ மாணவர்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றிய உரையின் தொகுப்பு)
  காலங்களைக் கடந்த கடவுள் ஒரு கன்னியின் வயிற்றுக்குள் கருவாக உடன்பட்டார். தேச எல்லைகளைக் கடந்த கடவுள் ஒரு சிற்றூரில் பிறக்கச் சம்மதித்தார். வரலாற்றையே வடிவமைக்கும் இறைவன் வரலாற்றுக்குள் தன்னை வரைந்துகொண்டார்.
ஆம்ää நசரேத்து என்ற சிற்றூரில் இடம்பெற்ற இயேசுவின் மனிதப்பிறப்புää உலக வரலாற்றையே உலுக்கிய ஓர் நிகழ்வு@ உலகமே திரும்பிப்பார்த்த ஓர் உன்னத நிகழ்வு. இயேசு யூதப் பண்பாட்டைச் சார்ந்தவராக அரமாய்க் என்ற மொழியைப் பேசுகின்றவராக பிறந்தார். இயேசுவின் பிறப்போடு வரலாறே தன்னை இரண்டாக வகுத்துக்கொண்டது.

கிறிஸ்துவுக்குமுன்ää கிறிஸ்துவுக்குப் பின் என வரலாறு தன்னை வரையறுத்துக்கொண்டது.
  நாம் அனைவருமே ஒரு குறிப்பிட்ட பண்பாட்டில்ää ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுகின்றவர்களாக இந்த உலகத்தில் பிறக்கின்றோம். இதிலே நமக்கு எந்தத் தெரிவும் இல்லை. அதாவது நமது பண்பாட்டைää நமது மொழியை நாம் தீர்மானிப்பதில்லை. நாம் எந்தப் பண்பாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்ää எந்த மொழியைப் பேசுகின்றவர்களாக இருந்தாலும் இவை அனைத்தும் இறைவன் நமக்கு அளித்த கொடைகளே!
  எனவே நாம் சார்ந்துள்ள பண்பாடும்ää நாம் பேசுகின்ற மொழியும் விலைமதிப்பற்ற செல்வங்கள். இவற்றைப்பற்றி நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்@ இவற்றைப்பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். பண்பாட்டைப்பற்றிப் பேசுகின்றபோதுää “பண்பாடு என்பது மனிதனின் ஆன்மா” போன்றது என சில இறையியலாளர்கள் கூறியுள்ளனர்.
கிறிஸ்தவமும் பண்பாடும்
  கிறிஸ்தவம் ஒரு பண்பாட்டிற்குள் மட்டும் தன்னை முடக்கிக்கொள்ளவில்லை. எல்லாப் பண்பாட்டின் நன்மையான அம்சங்களை கிறிஸ்தவம் ஏற்றுக்கொண்டது@ அரவணைத்துக்கொண்டது. எங்கெல்லாம் கிறிஸ்தவம் அறிவிக்கப்பட்டதோää அங்கெல்லாம் இருந்த பண்பாட்டின் நன்மையான அம்சங்களை கிறிஸ்தவம் உள்வாங்கிக்கொண்டது. இதைத்தான் ‘பண்பாட்டுயமாக்கல்’ என்கிறோம். கிறிஸ்தவம் பண்பாடுகளை உள்வாங்கியதாலும்ää நாடுகள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டதாலும் கிறிஸ்தவமும்ää நாடுகளும் பரஸ்பரம் வளம்பெற்றன.
  நாம் அனைவரும் ஒரே இறைத்தந்தையின் பிள்ளைகள். எனவே மற்றவர்களின் பண்பாடுகளை மதிக்கவும்ää பாராட்டவும் நாம் பழகிக்கொள்ள வேண்டும். வௌ;வேறு பண்பாட்டு அம்சங்கள் திருச்சபையை அழகுபடுத்துகின்றன@ திருச்சபைக்கு செழுமை சேர்க்கின்றன. இதையே “வேற்றுமையில் ஒற்றுமை” என்கிறோம்.

  முன்னாள் திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் முதல் தடவையாக ஒரு நாட்டிற்குப் பயணம் செய்யும்போதுää அவர் விமானத்தில் இருந்து இறங்கியதும் முதலில் குனிந்து மண்டியிட்டு அந்த நாட்டின் மண்ணை முத்தமிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏன் அவர் இப்படிச் செய்தார் என்றால் அந்த நாட்டின் பண்பாட்டைää கலாச்சாரத்தைää திருச்சபை மதிக்கின்றது@ போற்றுகின்றது என்பதன் வெளி அடையாளமாகவே அவர் இப்படிச் செய்தார்.
தமிழ் மொழியும் கிறிஸ்தவமும்
 தமிழ்ப் பண்பாடும்ää தமிழ் மொழியும் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையானது. தமிழ் மொழிக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையிலான உறவும் தொடர்பும் பிரிக்கமுடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. தமிழ் மொழி வரலாற்றில் ஐரோப்பிய மற்றும் உள்நாட்டு கிறிஸ்தவத் தொண்டர்களின் பணி அளப்பெரியதாகும்.  கிறிஸ்தவ சமயம் தமிழ் மொழியின் வளர்ச்சியில் பாரியää முன்னேற்றகரமான பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  தமிழில் உள்ள உலகப்பொதுமறை எனப் புகழப்படும் திருக்குறளை வீரமாமுனிவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்களை ஜி. யு. போப் போன்ற கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் மொழிபெயர்த்தனர். தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தையும் அதன் சிறப்பையும் உலகம் அறியச் செய்வதில் கிறிஸ்தவ மறைபரப்பாளர்களின் பணி காத்திரமானதாகும்.
 தமிழ் மொழியின் வளர்ச்சியில் கிறிஸ்தவத்தின் பல்துறை சார்ந்த பங்களிப்பு பலராலும் மெச்சிப் போற்றப்படுகின்றது. தமிழில் புத்தம் புதிய இலக்கியத் தோற்றங்களுக்கும் இலக்கிய வகைகளுக்கும் கிறிஸ்தவர்கள் வழிகோலினர். தமிழ்நாட்டிலும்  தமிழீழத்திலும் கல்விப் பெருக்கமும் அச்சு இயந்திரங்களும் மேலைநாட்டார் வரவால்ää துணையால் வளரவும்ää வளம் பெறவும் தொடங்கின. தற்கால உரைநடைää புதினம்- சிறுகதை-அகராதி- மொழிபெயர்ப்பு  அச்சுக்கலை-இதழியல் போன்ற பலவும் மேலைநாட்டுக் கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்களால் தமிழுக்கு அறிமுகமாகி வளர்ந்து தமிழைச் செழிக்கச் செய்தன.
பொங்கல் விழா நன்றியின் விழா
 தைப்பொங்கல் பண்டைக் காலம் முதல் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வந்த விழா. இது உழவர் திருநாளாக நன்றியின் விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இன்று இந்த விழா சமயங்கள் கடந்த விழாவாக தமிழ் மக்கள் அனைவராலும் பண்பாட்டு விழாவாகக் கொண்டாப்படுகிறது.

  “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். வீணே உண்டு கழித்திருப்போரை நிந்தனை செய்வோம்” என்று உழவுத் தொழிலின் மகத்துவத்தை எடுத்துக் காட்டினான் மகாகவி பாரதி. “உழைக்காதவன் உண்ணலாகாது” என்று பைபிளில் புனித பவுல் கூறுகின்றார்.
ஒரு உழவன் சொல்வதாக ஒரு புதுக்கவிதை இப்படிக் கூறுகின்றது:
“நாங்கள் சேற்றுக்குள் கால் வைக்காவிட்டால்
நீங்கள் சோற்றுக்குள் கைவைக்க முடியாது”

  ஆகவே நன்றியின் விழாவாகிய இந்தப் பொங்கல் விழா நமக்கு சில தெளிவுகளைத் தருவதாக! இயேசு வரலாற்று மனிதராக ஒரு குறிப்பிட்ட பண்பாட்டில் பிறந்து ஒரு குறிப்பிட்ட மொழியைப்  பேசினார். நாம் சார்ந்துள்ள பண்பாட்டைää மொழியை நான் அன்பு செய்வதைப்போன்று மற்றவர்களுடைய பண்பாட்டையும் மொழியையும் நாம் மதித்து வாழ்வோம்.

  உழைப்பின் மேன்மையை எடுத்துக் கூறும் இப்பொங்கல் விழா நன்றியின் விழா. எனவே வாழ்வு என்ற கொடைக்காகää நமது ஆற்றல் திறமைகளுக்காகää நாம் பெற்றுக்கொண்டுள்ள வாய்ப்பு வசதிகளுக்காகää இன்னும் அனைத்து நன்மைகளுக்காகவும் இன்றும் என்றும் இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.









பொங்கல் விழாவின்போது .....பண்பாடு பற்றிய கிறிஸ்தவத்தின் பார்வை -அருட்திரு.தமிழ நேசன் அடிகளார் Reviewed by Author on January 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.