அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அமைப்பினரால்..

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துரையாடல் நிகழ்வு இன்று  10-00 மணிக்கு 26-01-2017 மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மண்டபத்தில் நடைபெற்றது.

அருட் தந்தை க.ஜெகதாஸ்
மக்கள் காதர்
மாட்டின் டயஸ் இவர்களுடன் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் தமது மாவட்டத்தின்  கிராமங்களில் நடைபெறுகின்ற பல பிரச்சினைகளை  முன்வைத்து தமது ஆதங்கத்தினையும் கருத்துக்களைம்  தெருவித்தனர்.

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகளாக....

  • காணமல் போனோர்.... காணாமல் ஆக்கப்பட்டோர்
  • காணிசுவிகரிப்பு கடற்படையினர் மற்றும் இராணுவத்தினரிடம்
  • வைத்திய சாலையில் தொடர்ச்சியான உயிர்பலி அசமந்தப்போக்கு
  • மண் அகழ்வு
  • விவசாய பிரச்சினை மழையில்லா வறட்சி
  • சன்னார் பகுதியில் சிறுவர் ஆயுதப்பயிற்சி
  • குளங்கள் புனரமைப்பு
  • கடற்தொழில் பிரச்சினை (டோலர் மற்றும் இந்திய மீனவர்களின் வருகை ப்பிரச்சினை)
  • இராணுவத்தின் அத்துமீறல் காரணமாக மீனவர்கள் தொழிலே வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்கள் பாதிப்பு
  • மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தினர் பொதுமக்களைப்போன்று பல தொழில்கள் கல்விற்பனை தேநீர்கடை மரக்கறிகடை செய்வதனால் அன்றாட கூலித்தொழிலார்கள் பாதிப்பு
இன்னும் பல பிரச்சினைகள்  முன்வைத்து கருத்துக்களை தெருவித்தினர்.
இன்றைய கலந்துரையாடலின் சாரம்சமாக யுத்தம் முடிந்து 10 வருடங்கள்  கடந்த நிலையிலும் இன்னும் தமிழர்களாகிய எமது உரிமைகளுக்காக போராட வேண்டியுள்ளது இன்றும் நிம்மதின்றி சுகந்திரமின்றி கண்னீரும் கம்பலையுமாக  காலத்தினை கழித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
 நல்லாச்சி அரசாங்கமும் ஒன்றும் செய்யப்போவதில்லை நமது பாராளுமன்ற உறுப்பினர்களும் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் ஒன்றும் செய்யப்போவதில்லை ஏனெனில் ஆவர்களுக்கு என்ன தேவையோ அது கிடைக்கின்றது சொகுசான  வாழ்க்கையில் இருப்பவர்கள் எவ்வாறு எமது இந்த நிலமை தெரியப்போகின்றது தீர்வு கிடைக்கப்போகின்றது,

மக்களாகிய எமக்கிடையே முதலில் ஒற்றுமை இல்லை பகமையுணர்வுடன் வேற்றுமையாக உள்ளோம் எப்போது  நாம் ஒற்றுமையாக சின்னப்பிரச்சினையாக இருந்தாலும் ஒன்றுபட்டு செயற்படுகின்றோமோ அப்போதுதான் நமது  உரிமை கிடைக்கும்.

வவுனியாவில் 4நாட்களாக தொடரும் காணாமல் போனோரின் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்
அது போல  எமது மாவட்டத்தில் உள்ள சின்னப்பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும் அதற்காக ஒன்று படுவோம்...


 மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அமைப்பினரால் முன்வைக்கப்பட்ட  விடையத்தின்   ஆலோசணகள்

பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்களின் மனிதஉரிமைமீறல்களுக்காககுரல் கொடுத்தல்.

•    1990ம் ஆண்டுகாலப்பகுதிக்குபிற்பட்டகாலத்தில் மன்னார் மாவட்டபொதுமக்களின் பெரும்பாலானகாணிகள் இராணுவம் மற்றும் கடற்படையினரால் சுவீகரிக்கப்பட்டுமீளளிக்கப்படாமல் இன்னும் இருக்கின்றது. இதனால் இன்னும் மன்னார் மாவட்டதமிழ்ää மூஸ்லீம் மக்கள் தங்கள் இடங்களில் மீளக்குடியமரமுடியாதநிலைஉள்ளது.
•    மண்ணகழ்வு–மன்னார் மாவட்டமணல் வளம் ஒருசிலரின் சுயநலதன்மையினால் அத்துமீறிஅகழ்ந்தெடுக்கப்படுகின்றது. இதனால் மாவட்டத்தில் உள்ளஅனைத்துமக்களும் பாதிக்கப்படுவதுடன்ääமண் அகழ்வுமேற்க்கொள்ளப்படும் இடங்களில் உள்ளமக்கள் தமதுவாழிடங்களைவிட்டு இடம்பெயரக் கூடிய சூழ்நிலைஏற்படவாய்ப்புள்ளது. அத்தோடு கடல் நீர் இக் கிராமங்களுக்குள் ஊடறுத்து இக் கிராமங்கள் கடல் நீரில் மூழ்கும் நிலையும் எதிர்நோக்கப்படுகின்றது. மேலும் பெருநிலப்பரப்புக்கிராமங்களில் இவ்வாறானமண் அகழ்வுகள் இடம்பெறுவதனால் நிலத்தடிநீர்வளம் பாதிப்புக்குள்ளாகிநன்னீர் எல்லாம் உவர்நீராகமாறும் அபாயம் உருவாகியுள்ளது.
•    சட்டவிரோதகாடழிப்பு–பொதுவாககாடுகளைபசுமையின் தன்மையுடன் இயற்கைஅன்னையெனவர்ணிக்கின்றார்கள். வடபகுதியைப்பொறுத்தவரையில் காடுகள் இராணுவமுகாம்களுக்கும்ääகடற்படைமுகாம்களுக்கும்ääபயிற்சித்தளங்கள் அமைப்பதற்காகவும் அழிக்கப்படுகின்றது. அத்தோடு இராணுவத்தினரின் வாழ்வாதாரசெயற்பாட்டிற்காவும் காடுகள் அழிக்கப்படுகின்றது. மேலும் முசலிபிரதேசசெயலகப்பிரிவில் வில்பத்துகாட்டில் ஒருபகுதிஅழிக்கப்பட்டுஅரசாங்கத்தால் சிங்களக் குடியேற்றம் அமைக்கப்பட்டுள்ளது.
•    காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இடைக்காலநீதியின் பின்னும் எந்தவிதமானமுன்னேற்றகரமானதீர்வுகள் கிடைக்கப்பெறாததனால்தொடர்ந்துகாணாமல் ஆக்கப்பட்டஉறவுகளின் குடும்பஉறுப்பினர்கள் தொடர்ந்தும் எடுக்கப்படுகின்றமுயற்சிகளில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும்.
•    அரசியல் கைதிகள் - அரசியல் கைதிகள் தொடர்பாக இடைக்காலநீதியின் பிற்பாடுபலஉண்ணாவிரதபோராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் அரசுஅதற்குரியமுடிவையோதீர்வுகளையோவிடுதலைகளையோமேற்க்கொள்ளவில்லை.
•    அடிப்படைமனிதஉரிமைமீறல்கள்  - அரசஅதிகாரிகளாலும் சமயம் சார்பானவர்களாலும்ääதனிப்பட்டரீதியிலும் குழுக்களாகவும் நடைபெறுகின்றுது.   மக்கள் மனிதமாண்புடன் மதிக்கப்படவேண்டும்.  மனிதனுடையஉரிமைகள் ஒவ்வொருவருக்கும் உரித்தானது. மனிதஉரிமைகள் மீறப்படும்பொழுதுபல்வேறானபிரச்சனைகளைஎதிர்நோக்கவேண்டியுள்ளது. ஆகவேமனிதஉரிமைகளைபாதுகாப்போம்.
•    காணாமல் ஆக்கப்பட்டோருக்காகவடக்கில் அமைக்கப்படுகின்றகாணாமல் போனோர் அலுவலகத்திற்குபணிக்காகநியமிக்கப்பட்டுள்ளபணியாளர்களில் தமிழர்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர்.

தொகுப்பு வை-கஜேந்திரன் -
















மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அமைப்பினரால்.. Reviewed by Author on January 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.