வவுனியாவில் இரு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு திருட்டு
வவுனியா நகரில் உள்ள இரு வர்த்தக நிலையங்கள் நேற்றிரவு உடைக்கப்பட்டு பணம் மற்றும் பெறுமதிமிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
வவுனியா நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய கலாசார மண்டபத்தின் எதிரே அமைந்திருந்த புடவை விற்பனை நிலையம் மற்றும் சிகை அலங்கரிப்பு நிலையம் என்பவற்றிற்குள் நுழைந்துள்ள திருடர்கள், சலூனிலிருந்து 10ஆயிரம் ரூபாவும் புடவைக்கடையிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா வரையில் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திறப்பதற்கு வந்தபோதே குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
January 31, 2017
Rating:

No comments:
Post a Comment