அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் கேதீஸ்வரன் தலைமையில் சிறப்பாக இடம் பெற்ற'கால் கோள் விழா' நிகழ்வு-Photos


மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் இவ்வருடம் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை மகிழ்ச்சிகரமாக பாடசாலைக்கு வழி அனுப்பும் வகையில் முசலி பிரதேசச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கால் கோள் விழா' நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை முசலி பிரதேசச் செயலகத்தில் முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன்,கௌரவ விருந்தினர்களாக முசலி சுகாதார வைத்திய அதிகாரி ஒஸ்மன் சால்ஸ்,முசலி கோட்டக்கல்வி அதிகாரி து.கிரிஸ்துராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள 25 முன்பள்ளிகளைச்சேர்ந்த 281 மாணவர்கள் வரவேற்கப்பட்டு பாடாலை புத்தகப்பை வழக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு,குறித்த பாடசாலைகளைச் சேர்ந்த 39 முன்பள்ளி ஆசிரியர்களும் முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் கௌரவிக்கப்பட்டனர்.

-இதன் போது முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.

-வடக்கில் முன்பள்ளி மாணவர்களை கௌரவித்து அவர்களை தரம் 1 இற்கு இன்று அனுப்பும் வகையில் முதல் முதலாக நிகழ்வொன்றை முன்னெடுத்துள்ளமை முசலி பிரதேசச் செயலகம் என பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் கேதீஸ்வரன் தலைமையில் சிறப்பாக இடம் பெற்ற'கால் கோள் விழா' நிகழ்வு-Photos Reviewed by NEWMANNAR on January 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.