மன்னாரில் பல்வேறு வீதி அபிவிருத்திப்பிணிகள் ஆராம்பிக்கப்படவுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.ரயீஸ்-Photos
இலவங்குளம் ஊடாக புத்தளம் ,சிலாவத்துறை மற்றும் மறிச்சிக்கட்டி வீதி அபிவிருத்தி மற்றும் மன்னாரில் சில வீதிகளின் அபிவிருத்தி பணிகள் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.ரயீஸ் தெரிவித்தார்.
குறித்த வீதிகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹகீம் அவர்களின் தலைமையில் கடந்த 05ம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போதே குறித்த வீதிகளின் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த போரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.ரயீஸ் தெரிவித்தார்.
-குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.ரயீஸ் மேலும் தெரிவிக்கiயில்,,,
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியின் 5ம் கட்டைச் சந்தியில் இருந்து எருக்கலம்பிட்டிக் கிராமத்திற்குச் செல்லும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான 800 மீற்றர் நீளமான பிரதான பாதை அபிவிருத்தி சம்பந்தமாக கடந்த வருடம் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சருக்கூடாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அவர்களிடம் விடுத்த வேண்டு கோளுக்கிணங்க வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர்,வவுனியா மன்னார் பிரதான பொறியியலாளர்,மன்னார் நிறைவேற்றுப் பொறியியலாளர் உட்பட தொழிநுற்ப உத்தியோகத்தர்கள் வருகை தந்து பார்வையிட்டனர்.
-அவர்கள் முழுமையான மதிப்பீடுகள் செய்துள்ளனர்.எனவே இந்த வருடம் இவ்வீதியை முழுமையாக திருத்தித் தருமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வீதி அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் மற்றும் செயற்திட்ட பணிப்பாளர் ஆகியோர் உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பல்வேறு வீதி அபிவிருத்திப்பிணிகள் ஆராம்பிக்கப்படவுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.ரயீஸ்-Photos
Reviewed by NEWMANNAR
on
January 11, 2017
Rating:

No comments:
Post a Comment