அண்மைய செய்திகள்

recent
-

ஆசிய ஆண்களை பின்னுக்கு தள்ளி இலங்கை ஆணழகன் சாதனை...


சீனாவின் ச்சொங்கிங்கில் கடந்த 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற்ற 2016ஆம் ஆண்டுக்கான ஏஷியா ஃபெஷன் விருது வழங்கும் விழாவில் ஆசியாவுக்கான சிறந்த ஆண் மொடலாக இலங்கையின் டிமரோன் கார்வலோ தெரிவுசெய்யப்பட்டார்

இந்த நிகழ்வில் இலங்கையில் ஆண் பெண் மொடல்கள் உட்பட மூன்று பேர் விருது பெற்றுள்ளனர்.

இந்த விருது வழங்கும் விழாவில் அனைத்து கிழக்காசிய நாடுகளுடன் இலங்கை, இந்தியா, நேபாள் ஆகிய தெற்காசிய நாடுகளும் கலந்துகொண்டன.

இதில், இலங்கை சார்பில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு, தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் உட்பட, மேற்படி நாடுகளின் நவநாகரீக ஆடை, அணிகலன் உற்பத்தித் துறையின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் கலந்துகொண்ட இலங்கையின் ஆண் மொடலான டிமரோன் கார்வலோ, பெண் மொடல் ஜெயமாலி எரங்கிக்கா விஜேசூரிய மற்றும் ஃபெஷன் பாடகியான நதிலி சமரசிங்க ஆகியோர், மேற்படி நிகழ்வில் சிறப்பாகப் பங்கேற்றிருந்தனர்.

டிமரோன் உட்பட ஜெயமாலி, நதிலி மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் லூச்சிங் வோங் ஆகியோர் ஆசியாவின் சிறந்த கலைஞர்கள் என்ற விருதுக்காக முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய ஆண்களை பின்னுக்கு தள்ளி இலங்கை ஆணழகன் சாதனை... Reviewed by Author on January 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.