“இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் உன் பசியாற?“ அடைமழையிலும் 4ஆம் நாளாக தொடரும் போராட்டம்! குவியும் மக்கள்
காணாமல் போன தமது உறவுகளை தேடி தருமாறும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் கூறி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப்போராட்டம் இன்று நான்காம் நாளை எட்டியுள்ளது.
இன்றைய போராட்டத்தின்போது வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் வருகைத்தந்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள், யுத்தத்திற்கு பிறகு விசாரணைகளுக்காக அழைத்துச்செல்லப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என காணாமல் போனவர்களின் பெயர் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.
Go to Videos
The Hunger Strike Will Continue 4th Day The Accumulation People
இவர்கள் ஆரம்பித்த போராட்டத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனையோ பிரச்சினைகள் எழுந்தபோதும் அவற்றை துச்சமென மதித்து தமது ஆர்ப்பாராட்டத்தை முன்னெடுத்தார்கள் எமது தமிழ் உறவுகள்.
நேற்றைய மூன்றாம் நாள் போராட்டத்தின் போதே பலருடைய உடல்நிலை மோசமாக இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
எனினும் இன்று நான்காம் நாளாக தொடரும் போராட்டத்தில் உடல்நிலை மோசமான நிலையிலும் பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.
காணாமல் போன தமது உறவினர்களின் புகைப்படங்களை கைகளில் ஏந்தியவாறு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் இதோடு நின்றுவிடாது. நாடெங்கிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும். என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மிகவும் மனவேதையில் இவர்கள் காணப்படுகின்றார்கள். வெள்ளை வானில் வந்தவர்கள் எனது மகனை கடத்தினார்கள் எனவும் 10 வருடங்களாகியும் இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கண்ணீர்மல்க ஒரு தாய் தெரிவித்தார்.
கொட்டும் மழையிலும் இந்த பாவப்பட்ட தமிழ் மக்கள் தமது சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
குறிப்பாக இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக சுமார் 500க்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுதிரண்டு வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தார்கள்.
மேலும் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
சிறு குழந்தைகளிலிருந்து முதியவர்கள் வரை வவுனியாவில் நான்கு நாட்களாக படும்பாடு அரசியல்வாதிகளே உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அவர்களின் குரல் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?
பிள்ளைகளை பெற்ற பெற்றோரின் கதறல்கள், சகோதரர்களை தொலைத்து விட்டு தேடும் உடன்பிறந்த உறவுகள், கணவனை இழந்துவிட்டு நிர்க்கதியாக நிற்கும் பெண்கள், பெற்றோரை தேடும் குழந்தைகளின் அழுகுரல்கள் இந்த உலகில் யாருடைய காதுகளுக்கும் கேட்கவில்லையா?
இவர்களும் இந்த நாட்டில்தான் வாழ்கின்றார்கள், இவர்களது சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் உங்களுக்கு தெரியவில்லையா?
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும், காணாமல் போனவர்கள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் நேற்றைய நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இவர்கள் குறித்து தகவல்களை திரட்டுவதற்காக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வவுனியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் உன் பசியாற?“ அடைமழையிலும் 4ஆம் நாளாக தொடரும் போராட்டம்! குவியும் மக்கள்
Reviewed by Author
on
January 26, 2017
Rating:

No comments:
Post a Comment