அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முள்ளிக்குளம் கடற்படைத்தளத்தில் இடம் பெற்ற விசேட ஒத்திகை-(Photos)

மன்னார் முள்ளிக்குளம் கடற்படைத்தளத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற முப்படையினரின் ஒத்திகை நிகழ்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டார்.

மன்னார் முள்ளிக்குளம் கடற்படை தளத்தில் விசேட பயிற்சியை பூர்த்தி செய்த கடற்படையினருக்கு இலட்சினை அணிவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை முள்ளிக்குளம் கடற்படை தளத்தில் இடம் பெற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்து கொண்டு இலட்சினையை அணிவித்தார்.

இதனைத்தொடர்ந்து முள்ளிக்குளம் கடற்படைத்தளத்தில் விசேட ஒத்திகை நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த ஒத்திகை நிகழ்வானது ஐஸ்.ஐஸ் தீவிரவாத அமைப்பானது கடற்கரை பகுதியில் சிலரை பிடித்து பணயக்கைதிகளாக வைத்து சித்திரவதை செய்த நிலையில் கடற்படை,விமானப்படை மற்றும் இராணுவத்தின் உதவியுடன் குறித்த ஐஸ்.ஐஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்து தாக்குதல்களை மேற்கொண்டு பிடித்து வைக்கப்பட்டவர்களை காப்பாற்றும் நிகழ்வாக காணப்பட்டது.

-இதன் போது ஐஸ்.ஐஸ் தீவிரவாத அமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் சண்டையில் உயிரிழந்துள்ளமை மற்றும் குறித்த பகுதியை படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளமை போன்ற ஒத்திகை நிகழ்வு இடம் பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தன ஆகியோர் குறித்த ஒத்திகை நிகழ்வை பார்வையிட்டனர்.

இதன் போது கடற்படை தளபதி உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















மன்னார் முள்ளிக்குளம் கடற்படைத்தளத்தில் இடம் பெற்ற விசேட ஒத்திகை-(Photos) Reviewed by NEWMANNAR on February 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.