காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஆதரவு
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.இவ்வாறு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையைச் சேர்ந்த மக்களே இணைந்துள்ளனர்.அத்துடன் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி அத்துடன் முஸ்ஸிம் மற்றும் சிங்கள மக்கள் இப்போராட்டத்தில் இணைந்து தமது ஆதரவினையும்தெரிவித்துள்ளனர்.வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் கடந்த 24 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கிறது.இதேவேளை, தென்பகுதியைச் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் குழுவொன்று கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் காணி விடுவிப்பு கோரி போராடும் மக்களுக்கு தமது ஆதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஆதரவு
Reviewed by NEWMANNAR
on
February 27, 2017
Rating:

No comments:
Post a Comment