மன்னார் நகர முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாக குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.(படம்)
மன்னார் நகர முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுகள் அண்மையில் இடம் பெற்ற நிலையில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இன்று புதன் கிழமை (31) காலை மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் புதிய நிர்வாகக்குழுவின் முதலாவது நிர்வாகக் குழு கூட்டம் இடம் பெற்றது.
மன்னார் நகர முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் நீண்டகாலமாக இயங்காத நிலையில் காணப்பட்டதால் அதனை மீண்டும் சிறப்புற இயங்கவைக்கும் நோக்கோடு கடந்த 15 ஆம் திகதி வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் தலைமையில் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
அதனடிப்படையில் அன்றய தினம் உருவாகிய புதிய நிர்வாகக்குழுவினர் முதலாவது நிர்வாகக் குழு கூட்டத்தை அமைச்சரது தலைமையில் நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்திருந்தனர்.
-அதற்கமைவாக குறித்த கூட்டம் இன்று புதன் கிழமை (31) காலை அமைச்சரின் உப அலுவலகத்தில் இடம் பெற்றது.
-குறித்த கூட்டத்தில் முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தவகையில் 13 முச்சக்கர வண்டி தரிப்பிடங்களையும் சார்ந்த சகல அங்கத்தவர்களும் மாதாந்த சந்தாக்கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும்,தரிப்பிடங்களில் புதிதாக இணைகிறவர்கள் அங்கத்துவ சந்தாவாக 2 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி தமது அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பழைய அங்கத்தவர்கள் தமது பழைய அங்கத்துவத்திற்குரிய பற்றுச் சீட்டுக்களை நிர்வாகத்திடம் சமர்ப்பித்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பேரூந்து நிலைய தரிப்பிடம் மற்றும் வைத்தியசாலை தரிப்பிடம் ஆகிய இரு தரிப்பிடங்களிலும் காலை 06 மணி முதல் மாலை 08 மணி வரை நேர அட்டவணை தாயாரிக்கப்பட்டு அதனடிப்படையில் குறித்த தரிப்பிடங்களை சேர்ந்த முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடவேண்டும் எனவும் இரவு 08 மணி முதல் பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் இருந்து விரும்புகின்ற முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தலைவருடன் கலந்துரையாடி ஒரு நேர அட்டவணையை தயார் செய்து அதனடிப்படையில் செயற்பட முடியும் என்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகர முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாக குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
May 31, 2017
Rating:

No comments:
Post a Comment