அமெரிக்க ராணுவத்தில் கலக்கும் இந்தியர்: சம்பளம் எத்தனை கோடி தெரியுமா....
அமெரிக்க ராணுவத்தின் AH-64E போர் ஹெலிகொப்டர் பிரிவில் இந்தியாவின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மோனார்க் ஷர்மா என்பவர் விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரின் போர்ட் ஹூட் தலைமையிடத்தில், இந்திய ரூபாய் மதிப்பில் 1.20 கோடி வருமானத்துடன் ராணுவத்தில் பணியாற்ற ஷர்மாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
போர் விமான விஞ்ஞானியாக பணியமர்த்தப்பட்டுள்ள ஷர்மா, இந்த ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் சேர்க்கப்பட்ட போர் விமானத்தின் வடிவமைப்பு, ஆய்வு, உற்பத்தி மற்றும் பராமரிப்பு போன்றவற்றை கவனித்து வருகிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு, நாசாவின் தகவல் தொலைத்தொடர்பு பிரிவில் ஜூனியர் ஆராய்ச்சி விஞ்ஞானியாக தனது பணியை துவங்கினார் ஷர்மா.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த ஷர்மா ஒரு சில மாதங்களிலேயே தனது திறமையை நிரூபித்து அமெரிக்க கவுரவ விருதுகளான 'ராணுவ சேவை' மற்றும் 'சிறந்த பாதுகாப்பு சேவை' உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.
ராஜஸ்தான் காவல்துறையில் கூடுதல் தனிப்பிரிவு செயலராக பணியாற்றிய ராகேஷ் ஷர்மா என்பவரது மகனாவார் மோனார்க் ஷர்மா. விண்வெளி அறிவியல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட ஷர்மா, தற்போது இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் 'தலைமை' குறித்து கலந்துரையாடி வருகிறார்.
இது குறித்து பேசிய ஷர்மா, தனக்கு இந்திய ராணுவத்தில் பணிபுரிய வாய்ப்புக் கிடைக்கவில்லை. தற்போது அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தாலும், எனது சேவை இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும். கடும் உழைப்பினால் வாழ்க்கையில் வெற்றிபெறும் யுக்தியை இந்திய மாணவர்களுக்கு கூறி வருகிறேன் என்றார்.
நாசாவில் 2011ஆம் ஆண்டின் மூன் பாகி திட்டம் மற்றும் 2012 ஆம் ஆண்டின் லூனா போட் திட்டத்தில் ஷர்மாவின் பங்களிப்பு அவருக்கு புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இவ்விரு திட்டங்களிலும், ஷர்மாவின் தலைமையில் பணியாற்றிய குழு சிறந்த செயல்திறன் விருதினை வென்றது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்ற ஷர்மாவுக்கு நாசா வேலையும், கிரீன் கார்டும் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்ததையடுத்து, ஷர்மா அந்நாட்டின் குடியுரிமையும் பெற்றுள்ளார்.
அமெரிக்க ராணுவத்தில் கலக்கும் இந்தியர்: சம்பளம் எத்தனை கோடி தெரியுமா....
Reviewed by Author
on
May 09, 2017
Rating:

No comments:
Post a Comment