தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது! சர்வதேச நீதிபதிகள் தேவை: சந்திரிக்கா....
யுத்த குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு என்பவற்றுக்கான காரியாலயத்தில் இன்று(9) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்துரைத்த அவர்,
யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
தமிழ் மக்களுக்கு நீதியினைப் பெற்றுக்கொடுப்பதில் எந்தவிதமான தடங்களும் இருக்கக் கூடாது. இதனைக் கூறுவது நீதியின் அடிப்படையில் தான். அதனைத் தான் நான் வலியுறுத்துகிறேன்.
எனவே, வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது. அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படவேண்டும் என்றார்.
தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது! சர்வதேச நீதிபதிகள் தேவை: சந்திரிக்கா....
Reviewed by Author
on
May 10, 2017
Rating:
Reviewed by Author
on
May 10, 2017
Rating:


No comments:
Post a Comment