100 மீற்றர் ஓட்டப்பந்தயம்: மின்னல் வேகத்தில் கடந்து புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்....
இலங்கையில் நடைபெற்று வரும் தடகளப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீரர் வினோஜ் சுரன்ஜய புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தால் நடத்தப்படும் தடகளப் போட்டி தியகம மகிந்த ராஜபக்ச அரங்கில் நடைபெற்று வருகின்றது.
இதில், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்கொண்ட வினோஜ் சுரன்ஜய 10.30 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்துள்ளார்.
இதன் மூலம் இலங்கை மைதானங்களில் நடந்த 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் மிக வேகமாக பந்தய தூரத்தை கடந்த இலங்கை வீரர் என்ற புதிய சாதனையை வினோஜ் சுரன்ஜய படைத்துள்ளார்.
எனினும் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கையின் ஹிமாஷா இஷான் 2016ல் இந்திய மைதானத்தில் 10.26 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே தேசிய சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
100 மீற்றர் ஓட்டப்பந்தயம்: மின்னல் வேகத்தில் கடந்து புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்....
Reviewed by Author
on
June 01, 2017
Rating:

No comments:
Post a Comment