அட்டகாசமான வடிவமைப்புடன் அறிமுகமாகும் Lotus Elise Cup 250 கார்....
உலகத் தரம் வாய்ந்த கார் வடிவமைப்பிற்கு பெயர் பெற்ற நிறுவனங்களுள் Lotus நிறுவனமும் ஒன்றாகும்.
இந்நிறுவனம் தற்போது Lotus Elise Cup 250 எனும் புதிய காரினை வடிவமைத்துள்ளது.
கண்கவர் வடிவத்தினைக் கொண்ட இக் காரானது 243 குதிரை வலு கொண்டதாகக் காணப்படுகின்றது.
அத்துடன் வெறும் 3.9 செக்கன்களில் ஓய்விலிருந்து மணிக்கு 60 கிலோ மீற்றர்கள் எனும் வேகத்தை அடையவல்லது.
மேலும் இதன் அனைத்து பாகங்களும் உயர் வினைத்திறன் ஊடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக் காரின் மொத்த எடையானது 884 கிலோ கிராம்களாகும்.
இதேவேளை இக் காரின் விலை மற்றும் எப்போது விற்பனைக்கு வருகின்றது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
அட்டகாசமான வடிவமைப்புடன் அறிமுகமாகும் Lotus Elise Cup 250 கார்....
Reviewed by Author
on
June 01, 2017
Rating:

No comments:
Post a Comment