அண்மைய செய்திகள்

recent
-

2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த பல்கலைக்கழங்களில் இடம்பிடித்த ETH Zurich பல்கலைக்கழகம்


ஐரோப்பிய சிறந்த பல்கலைக்கழங்களில் ETH Zurich பல்கலைக்கழகம் சிறந்த பல்கழைக்கழத்திற்காக பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

2017 ஆம் ஆண்டிற்கான உலக புகழ்பெற்ற பல்கலைக்கழங்கள் குறித்து Times Higher Education நடத்திய கருத்துக்கணிப்பில் சூரிச் பல்கலைக்கழகம் 22 வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பானது, ஆராய்ச்சி துறை, மாணவர்களுக்கு கற்பிக்கும் விதம் , பல்கலைக்கழகத்தின் அனுபவம் ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது.

Imperial College London, University of Pennsylvania மற்றும் Cornell University ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.

சீனாவில் உள்ள Tsinghua University பின்தங்கிய நிலையில் இருந்து முதல் முறையாக 15 வது இடத்தை பிடித்துள்ளது.

இதில் ETH Zurich 22 வது இடத்தையும், oscow University 30 வது இடத்தையும் மற்றும் Paris Sciences et Lettres (PSL) 38 வது இடத்தையும் பிடித்துள்ளது.

சுவிஸில் உள்ள Ecole Polytechnique Fédérale de Lausanne (EPFL) 50 வது இடத்தை பிடித்துள்ளது.

உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் ETH சூரிச் வழக்கமாக பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் QS உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் ஐரோப்பா பல்கலைக்கழகங்களில் சிறந்த பல்கலைக்கழகமாகவும், உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் எட்டாவது இடத்தையும் பிடித்தது

பிப்ரவரி மாதம் ETH சூரிச் மற்றும் EPFL ஆகியவை சர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த பல்கலைக்கழங்களில் இடம்பிடித்த ETH Zurich பல்கலைக்கழகம் Reviewed by Author on June 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.