சவுதி அரேபியாவில் தவிக்கும் தமிழர்கள்: தலைமறைவான பொறுப்பாளர்....
சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியர்கள் பலர் வேலை இழந்துள்ளனர், அவர்களில் தமிழகத்தை சேர்ந்த பலரும் உள்ளனர்.
இந்நிலையில் வாட்ஸ் அப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதில், தாங்கள் சவுதி அரேபியாவில் தங்கி கட்டுமானப் பணிகளை செய்து வருவதாகவும், ஆனால் கட்டுமான நிறுவனம் தங்களுக்கு 16-மாதங்கள் சம்பளம் தராமல் இழுத்தடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்நிறுவனத்தின் பொறுப்பாளர் தலைமறைவாகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் உட்பட 150 இந்தியர்கள் ரியாத்தில் தவித்து வருகிறோம், எங்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து செல்ல சுஷ்மா சுவராஜ் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் தவிக்கும் தமிழர்கள்: தலைமறைவான பொறுப்பாளர்....
Reviewed by Author
on
June 15, 2017
Rating:

No comments:
Post a Comment