சூப்பர் மேனாக மாறி புதிய சாதனை படைத்த யாழின் தங்கமங்கை....
இலங்கையில் நடைபெற்று வரும் தடகளப் போட்டியில் கோலூன்றி தாண்டுதலில் யாழின் தங்கமங்கை என்றழைக்கப்படும் அனித்தா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆசிய மெய்வல்லுநர் போட்டிக்கான இரண்டாவது திறன்காண் போட்டி தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான கோலூன்றித் தாண்டுதலில் கலந்துக்கொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன், 3.46 மீற்றர் உயரம் தாண்டி இலங்கைக்கான புதிய தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இதே மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது திறன்காண் போட்டியில் 3.45 மீற்றர் உயரம் தாண்டி நிலைநாட்டிய தனது சொந்த சாதனையை அனித்தா முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் மேனாக மாறி புதிய சாதனை படைத்த யாழின் தங்கமங்கை....
Reviewed by Author
on
June 02, 2017
Rating:

No comments:
Post a Comment