மன்னாரில் தொடர் மின் தடை-மக்கள் பாதிப்பு.........
மன்னாரில் நீண்ட காலத்திற்கு பின்னர் மீண்டும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதாகவும் இதனால் மன்னார் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பகல் இரவு பாராது தொடர் மின் தடை ஏற்பட்டு வந்தது.
மன்னார் மின்சார சபை அதிகாரிகளினால் தொடர்ந்தும் பகல் இரவு பாராது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினை தீர்க்கப்பட்டது.அதனைத்தொடர்ந் து மன்னார் மின்சார சபையின் மின் அத்தியட்சகர் இடமாற்றம் பெற்றுச் சென்றார்.
-தற்போது மன்னார் மின்சார சபைக்கு புதிய முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
-எனினும் தற்போது தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற தொடர் மின் தடைக்காண காரணம் இது வரை கண்டு பிடிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.
-கடந்த சில வாரங்கலாக இரவு,பகல் பாராது திடீர் திடீர் என மின் தடைப்படுகின்றது.மின்சாரம் தடைப்பட்டவுடன் மன்னார் மின்சார சபையின் தொலைபேசி இலக்கத்திற்கு மக்கள் தொடர்பை ஏற்படுத்தினால் உடனடியாக தொடர்பு செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.
-அல்லது பதிலழிக்கும் பணியாளர் மன்னாரில் மின் தடைப்பட்டால் யாழ்ப்பாண அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் என்ற பதிலை கூறி விட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்து விடுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-தற்போது முஸ்ஸீம் மக்கள் புனித நோன்புக்கடமைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதினால் நோன்பு நோற்கும் முஸ்ஸீம் மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற மின் தடையை நிவர்த்திய செய்ய மன்னார் மின்சார சபை அத்தியட்சகர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தொடர் மின் தடை-மக்கள் பாதிப்பு.........
Reviewed by Author
on
June 11, 2017
Rating:

No comments:
Post a Comment