ஊழல் குற்றச்சாட்டு! பதவி விலகினார் வடமாகாண கல்வி அமைச்சர்....
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா பதவி விலகியுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது முடிவு குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் அறிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும், அவை குறித்து விசாரணைகள் நிறைவடையும் வரையில் தாம் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக த.குருகுலராசா தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விளக்கங்களை அளிப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் நேற்று வரையில் கால அவகாசம் வழங்கியிருந்தார்.
இந்நிலையில், குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருக்கும் அமைச்சர்கள் இருவரும் தனது விளக்கங்களை அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊழல் குற்றச்சாட்டு! பதவி விலகினார் வடமாகாண கல்வி அமைச்சர்....
Reviewed by Author
on
June 11, 2017
Rating:

No comments:
Post a Comment