மன்னார் தட்சணா மருதமடு ம .வி மாணவி பிரியங்கா 3 தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் மன்னார் தட்சணா மருதமடு மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்து வம் செய்த பா.பிரியங்கா 400 மீற்றர் சட்டவேலி, 800 மீற்றர், 1500 மீற்றர் போன்றவற்றில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
மன்னார் தட்சணா மருதமடு மகா வித்தியாலயத்தை பிரதிநிதித்துவம் செய்த பா.பிரியங்கா 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் 1:13:6 செக்கன்களில் ஓடியும், 800 மீற்றர் ஓட்டத்தில் 2 நிமிடம் 37 செக்கன்களில் ஓடியும், 1500 மீற்றர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
மூன்று தங்கப்பதக்கங்களைக் கைப்பற்றியமை தொடர்பில் வழங்கிய பிரத்தியெக செவ்வியில், ‘‘எனது பாடசாலை தேசிய மட்டத்தில் எதுவித பதக் கத்தையும் பதிவு செய்யவில்லை. அதற்காக போராடி வருகின்றேன்.
எனது இலட்சியம் பிரதேச செயலாளராக வருவது. கல்விக்கு இடையூறு இல்லாமல் எனது விளையாட்டைத் தொடர்ந்து வருகின்றேன். எனது அண்ணா எனக்கான உதவிகளைச் செய்து வருகின்றார்.
கடந்த வருடம் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் மேற்குறித்த நிகழ்ச்சி யில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளேன். இந்த ஆண்டு வயதுப் பிரிவு மாற்றத்தால் சாதனை படைக்க இயலாமல் போனது. எனினும் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளேன்.
எமது கல்லூரியில் தடை தாண்டல் உபகரணங்கள் இல்லை. பிரதேச செயலகத்திலிருந்தே உதவி பெற்று பயிற்சி எடுத்து வருகின்றேன். ஒவ்வொரு பாடசாலைக்கும் தகுந்த உபகரணங்கள் வழங்கினால் அவர்களும் சாதனையாளர்களாக மாறுவார்கள்.
என்னை சாதனை வீராங்கனையாக மாற்றிய எமது பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஜெ.எம்.அருள்ராஜ் மற்றும் அதிபர் பாடசாலை சமூகம் ஆகி யோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.
பிரியங்கா கடந்த வருடம் நடைபெற்ற தடகளத் தொடரில் மூன்று போட்டிகளில் களமிறங்கி மூன்றிலும் சாதனையுடன் தங்கப்பதக்கம் கைப்பற்றியமை குறிப்பிடத் தக்கது.

Reviewed by NEWMANNAR
on
July 10, 2017
Rating:

No comments:
Post a Comment