பாடசாலைகளின் தடகளத் தொடரில் மடுக்கரை அ.த.க.பா. வரலாற்று அடைவு
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் 14 வயது ஆண்கள் பிரிவு உயரம் பாய்தலில் மன்னார் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தங்கப் பதக்கம் வென்றது. இந்தப் பதக்கமே அந்தப் பாடசாலையின் வரலாற்றில் பதிவான முதல் தங்கப்பதக்கமாக அமைந்தது.
வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 10ஆவது தடகளத் தொடர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது நாள் நடைபெற்ற 14 வயது ஆண்கள் பிரிவு உயரம் பாய்தலில் மன்னார் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த நா.கோகுலன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.
இது தொடர்பாக நா.கோகுலன் வழங்கிய பிரத்தியேக செவ்வியில், ‘‘எனது அப்பா தோட்டத் தொழிலைப் பிரதான தொழிலாகச் செய்து வருகிறார். எனது பாடசாலையில் உரிய வசதிகள் ஏதும் இல்லை. நான் உமியில் பாய்ந்தே எனது பயிற்சியை மேற்கொண்டேன்.
நான் வலயமட்டப் போட்டியில் காட்டிய பெறுபேற்றைப் பார்த்த நானாட்டான் மகா வித்தியாலய ஆசிரியர் தேவகரன், என்னை தனது பாடசாலைக்கு அழைத்து 3 மாதங்களாக எனக்கான பயிற்சிகளை வழங்கினார்.
எனது பாடசாலைக்கு உயரம்பாய்தலில் உரிய வசதிகள் செய்து தரப்படுமாயின் தேசியமட்டப் போட்டியிலும் நான் தங்கப்பதக்கம் பெறுவேன்’’ எனத் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
July 10, 2017
Rating:

No comments:
Post a Comment