27 ஆண்டுகளின் பின் விடுதலை பெற்ற மயிலிட்டி! மகிழ்ச்சியில் யாழ். மக்கள்...
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் உள்ளிட்ட மயிலிட்டி துறை வடக்கு ஜே.251 கிராமசேவகர் பிரிவில் 54 ஏக்கர் மக்களுடைய நிலம் போன்றவை விடுவிக்கப்பட்டுள்ளன.
குறித்த காணிகளை யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி யாழ்.மாவட்ட செயலாளர் என்.வேதநாயகனிடம் இன்று காலை உத்தியோகபூர்வமான கையளித்துள்ளார்.
காணி கையளிப்பு நிகழ்வு மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ். மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன், படை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி கண்ணகை அம்மன் கோவில் போன்றவற்றை மக்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
மேலும், 27 வருடங்களுக்கு பின் மயிலிட்டி துறைமுகத்தில் மக்களின் படகுகள் வந்து சேர்ந்துள்ளதுடன், மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
27 ஆண்டுகளின் பின் விடுதலை பெற்ற மயிலிட்டி! மகிழ்ச்சியில் யாழ். மக்கள்...
Reviewed by Author
on
July 03, 2017
Rating:

No comments:
Post a Comment