அண்மைய செய்திகள்

recent
-

ஜெயபுரம் மக்களின் வயல் நிலங்களை பகிர்ந்தளிக்க சிறீதரன் mp நடவடிக்கை...


கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் கிராமத்தில் வாழும் மக்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வயல் நிலங்கள் இன்னமும் வழங்கப்படாமையால் வாழ்வாதாரங்கள் ஏதுமற்ற நிலையில் பல்வேறுபட்ட கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து ஜெயபுரத்திற்கு நேற்று (02) காலை சென்றுள்ளார்.

அத்துடன், மக்களின் வயற்காணிகளைப் பார்வையிட்டுள்ளதுடன், அந்த காணிகள் அங்குள்ள மக்களுக்கு உரிய முறைப்படி பகிர்ந்தளிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வசதி வாய்ப்புக்களில் பின்தங்கிய நிலையில் காணப்படும் ஜெயபுரம் கிராமத்தில் வாழும் மக்களில் பலர் வாழ்வாதாரத் தொழில்கள் ஏதும் இன்றிய நிலையில் பல்வேறுபட்ட கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு வசிக்கும் மக்களில் அதிகளவானவர்கள் இனக்கலவரங்களின் போது சிங்கள வன்செயல்களால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்து வந்து ஜெயபுரத்தில் குடியேறியவர்களாகவே காணப்படுகின்றார்கள் என தெரியவந்துள்ளது.

ஜெயபுரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக 1984ம் ஆண்டு அப்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த ஜெகநாதன் 2 ஏக்கர் வயல் காணி வீதம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வயற்காணிகளை இனங்கண்டு நில ஆளவீடுகளும் இடம்பெற்றிருந்தமையும் தொடர்ந்து நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள், அரசியல் ஸ்திரமின்மைகள் காரணமாக தற்போது வரை ஜெயபுரம் மக்களுக்கான வயற்காணிகள் வழங்கப்படவில்லை.

இதனை இந்த மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது கவனத்திற்குக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கு வசிக்கும் மக்களுடன் அவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட வயற்காணிகாணிகளை நேரில் சென்று பார்வையிட்டடுள்ளார்.

இது தொடர்பில் உரிய தரப்பினருடன் தொடர்பு கொண்டு இந்த காணிகள் மக்களுக்குக் கிடைக்க ஆவன செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பண்டிவெட்டிக் குளத்தின் கீழ் 50 குடும்பங்களுக்குச் சொந்தமான 30 ஏக்கர் மேட்டு நிலமும் அரச விவசாயப் பண்ணைக்குரிய நிலமும் எவ்வித பயிர்ச் செய்கையுமின்றிய நிலையில் நீண்டகாலமாகக் காணப்படுகின்றது.

மேலும், தேவன்குளத்தின் கீழ் இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் வயற்காணி வீதம் ஒதுக்கப்பட்டுள்ள நிலம் இந்த மக்களிடம் இன்னமும் கையளிக்கப்படாமையால் பற்றைக் காடு பற்றிக் காணப்படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.



ஜெயபுரம் மக்களின் வயல் நிலங்களை பகிர்ந்தளிக்க சிறீதரன் mp நடவடிக்கை... Reviewed by Author on July 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.