வவுனியா கல்வியல் கல்லூரியின் கலாச்சார நிகழ்வு...
வவுனியா கல்வியல் கல்லூரியின் கலாச்சார நிகழ்வுகள் இன்று கல்லூரியின் பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போது பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது தமிழ் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு பிரதம விருந்தினருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்திய துணைத்தூதுவரால் ஒரு தொகுதி புத்தகங்கள் கல்லூரியின் பீடாதிபதி கு.சிதம்பரநாதனிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது உப பீடாதிபதி பரமானந்தன், கல்வியல் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கல்வியல் கல்லூரியின் கலாச்சார நிகழ்வு...
Reviewed by Author
on
July 29, 2017
Rating:

No comments:
Post a Comment