எங்களுக்குரிய நிதி எங்கே? வடக்கு மாகாண மாவீரர் குடும்பங்கள் குற்றச்சாட்டு...
வடக்கு கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மாவீரர் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி இதுவரையிலும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என மாவீரர் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாவீரர் குடும்பங்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்குவதாக வடக்கு கிராமிய அமைச்சின் ஊடாக விபரங்கள் திரட்டப்பட்ட நிலையில் மாதங்கள் பல கடந்தும் தமக்கு எந்த வித உதவியும் கிடைக்கவில்லை என குறித்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனால், கிராமிய அமைச்சின் ஊடாக வடமாகாண மாவீரர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவித் திட்டம் வழங்குவதாக கூறி கிராம அலுவலர் பிரிவு ரீதியாக விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டிருந்தன.
அச்சமான சூழலிலும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வாழும் எமது குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த விண்ணப்பப் படிவங்களை பெற்று பூரணப்படுத்தி விண்ணப்பித்துள்ளோம்.
இருப்பினும் இதுவரையிலும் எந்த வித உதவியும் கிடைக்கவில்லை.
மாவீரர் குடும்பங்களுக்கு உதவித் திட்டம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு நடந்தது என்ன? சுயநல அரசியலுக்காக மாவீரர் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என இதன் போது அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்களுக்குரிய நிதி எங்கே? வடக்கு மாகாண மாவீரர் குடும்பங்கள் குற்றச்சாட்டு...
Reviewed by Author
on
July 03, 2017
Rating:

No comments:
Post a Comment