முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம்....
சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று மேற்கொள்ளப்பட்டுகின்ற பணிப் புறக்கணிப்பின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த கொலை முயற்சி தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியே குறித்த பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் பணிப் புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம்....
Reviewed by Author
on
July 24, 2017
Rating:
Reviewed by Author
on
July 24, 2017
Rating:


No comments:
Post a Comment