முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்- முதலமைச்சர்,அமைச்சர், உறுப்பினர்கள் வெளியேறினர்?
முல்லைதீவு மாவட்டத்தினில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ் குடும்பங்கள் காணிகளின்றி இருக்கின்றன.அவற்றினில் ஒரு பங்கினருக்காவது காணி வழங்க மறுத்துவரும் அரசு முஸ்லீம் மக்களின் 144 குடும்பங்களை குடியேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் காணியினை கோருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.முஸ்லீம்கள் மீளக்குடியேற்றப்படுவதற்கு நான் எதிரானவனல்ல.ஆனால் மறுபுறம் யுத்தத்தின் அனைத்து அழிவுகளையும் தாங்கிநிற்கும் தமிழ் மக்களிற்கு ஒருபகுதியினருக்கான காணி பிரச்சினையையாவது தீர்க்க அரச அமைச்சர் றிசாத் தயாரா இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே காணிப் பிரச்சினை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இன்று இடம்பெற்ற காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் வெளிநடப்புச் செய்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம், இன்று திங்கட்கிழமை நடைபெற்றிருந்த நிலையினில் மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பாக அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவரை தொடர்ந்து வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்,உறுப்பினர்கள் பலரும் வெளிநடப்புச் செய்துள்ளனர்
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்- முதலமைச்சர்,அமைச்சர், உறுப்பினர்கள் வெளியேறினர்?
Reviewed by NEWMANNAR
on
July 10, 2017
Rating:

No comments:
Post a Comment