அமெரிக்கா தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும்: சிரியா எச்சரிக்கை....
சிரியா மீது அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரிய அதிபரான பசர் அல் ஆசாத்துக்கு எதிராக ஒரு பிரிவினர் போராடி வருவதால் அங்கு, 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
அதிபருக்கு எதிராக புரட்சி படை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவாக உள்ளது.
உள்நாட்டு போரை பயன்படுத்தி ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
தீவிரவாதிகள், புரட்சிப்படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளையும் மீட்பதற்கு சிரியா இராணுவம் போராடி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் புரட்சிப்படையினர் கட்டுப்பாட்டில் இருந்த கான் ஷேக்வுன் என்ற நகரை மீட்பதற்கு இராணுவம் தாக்குதல் நடத்தியது.
அந்த தாக்குதலில் இரசாயன குண்டுகளும் வீசப்பட்டன. இதில் புரட்சிப்படை வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், இரசாயனம் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறி ஷயாரத் விமானப்படை தளத்தையும் தாக்கியது.
இதில் மத்திய தரை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் தாங்கி கப்பலில் இருந்து 59 குண்டுகள் வீசப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் சிரியா இரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறி, கடந்த வாரம் அமெரிக்க கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
சிரியாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் பைசல் அல்-மொக்தத் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்தார்.
- Maalai Malar-
அமெரிக்கா தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும்: சிரியா எச்சரிக்கை....
Reviewed by Author
on
July 04, 2017
Rating:
Reviewed by Author
on
July 04, 2017
Rating:


No comments:
Post a Comment