சியரா லியோன்: நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு...
சியரா லியோனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியரா லியோனில் கடந்த திங்கள் கிழமை அன்று கனமழை பெய்துள்ளது.
தலைநகரான ஃப்ரீடவுனுக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் அதிகாலை நேரத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்ட பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.
மக்கள் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர்.
நேற்று வெளியான தகவலில், 400-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை 500 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று முதல் உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைக்கும் பணி நடந்து வருகிறது.
நிலச்சரிவில் சிக்கியவர்களின் சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கமும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் உதவி வருகின்றன.
கடந்த 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் சியரா லியோனில் எபோலா நோய் பரவியை தொடர்ந்து சுமார் 4,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சியரா லியோன்: நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு...
Reviewed by Author
on
August 18, 2017
Rating:

No comments:
Post a Comment