வடக்கின் பொருளாதார அபிவிருத்திக்காக யாழ். முகாமையாளர் சம்மேளனம் புதிய முயற்சி
வடக்கின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று காலை-09.30 மணி முதல் நல்லூர் யூரோவில் மாநாட்டுமண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ். முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்விற்கு வர்த்தக வங்கியின் யாழ். மாவட்டப் பிராந்திய முகாமையாளர் எஸ்.ரஜீவன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டு வடக்கின் பொருளாதாரஅபிவிருத்தி தொடர்பான விசேட கருத்துரை ஆற்றினார்.
தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் போது கடந்த யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் பொருளாதார ரீதியாக மீளெழுவதில் வடக்கு மாகாணம் பின்தங்கிய நிலையிலிருப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் தற்போது நிலவும் பொருளாதார, சமூக ரீதியான நெருக்கடிகளை எங்களிடமுள்ள வளங்கள், வாய்ப்புக்களைக் கொண்டு பிரதேசங்களையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் எவ்வாறு மேம்படுத்தலாம்? என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் இரா. சிவச்சந்திரன், அரசியல் சமூகஆய்வாளர் ரி. பரந்தாமன், தென்னை அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளர் என். சத்தியேந்திரா, யாழ். முகாமையாளர் சம்மேளனத்தின் பிரதம இணைப்பாளர் விவேகானந்தன் நிரஞ்சன்,
பொறியியலாளர் எம்.தில்லைநாதன், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் தி. சிறீதரன், யாழ். மாவட்ட வங்கிகளின் முகாமையாளர்கள், வங்கிகளின் பிராந்திய முகாமையாளர்கள், சிறு தொழில் முயற்சியாளர்கள், சிறு முயற்சியாளர்களுக்கான திணைக்களப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைத்தனர்.
வடக்கு மாகாணத்தின் மொத்த அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு யாழ். முகாமையாளர் சம்மேளத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களை உரிய முறையில் செயற்படுத்துவதெனவும்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கின் பொருளாதார அபிவிருத்திக்காக யாழ். முகாமையாளர் சம்மேளனம் புதிய முயற்சி
Reviewed by Author
on
August 18, 2017
Rating:

No comments:
Post a Comment