77 தமிழக மீனர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.....
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று இந்திய அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர்.
சர்வதேச கடல் எல்லையில் வைத்து, இந்திய கடலோர பாதுகாப்பு தரப்பினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மேலும் 15 தமிழக மீனவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
77 தமிழக மீனர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.....
Reviewed by Author
on
August 04, 2017
Rating:

No comments:
Post a Comment