தமிழர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் துணிச்சலுடன் போராட வேண்டும்: பிரசன்னா இந்திரகுமார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்து வேலை செய்யாமல் போனால் இந்த நாட்டின் சுபீட்சமான எந்த ஒரு அரசியல் தீர்வையும் அரசாங்கத்தினால் பெற முடியாது என்பது தான் உண்மை என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
சவுக்கடி புனித யாகப்பர் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி நிகழ்வானது நேற்று பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
குழந்தைகளுக்கு எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக நெறிப்படுத்தலை பெற்றோர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும்.
கடந்த காலங்களில் இந்த நாட்டின் தமிழ்த் தேசிய விடுதலைக்காக நாங்கள் பேராடினோம். ஆனால் இன்று தமிழர்கள் வாழும் எல்லைக்கிராமங்களிலே ஏனைய சமூகத்தவர்கள் அத்து மீறி காணிகளை பிடித்துக் கொண்டு அரச காணிகள் என்று சொல்கின்றார்கள்.
ஆகவே எல்லைப்புறங்களில் வாழும் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் இது தொடர்பாக பல கிராமங்களில் இது பற்றி கதைத்திருக்கின்றேன்.
மண்ணிற்காக போராடினோம் ஆனால் மண்ணின் போராட்டம் துரதிஸ்ரவசமாக மௌனித்தது. இதன் பின்பு தமிழ் மக்களுடைய இருப்புக்களை தக்கவைப்பதற்கான போராட்டத்தை கொண்டு நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இவ்வாறான காணிகள் சுவிகரிப்பானது எமது சகோதர இனத்தின் அரசியல் பின்புலத்துடன் இவை நடைபெறுவதனை அறிகிறோம் ஆகவே இதனை நிறுத்த வேண்டும்.
இதற்கு தமிழர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் துணிச்சலுடன் நின்று போராட வேண்டும் அவ்வாறு இருக்கும் பட்சத்திலே தான் எமது மக்களுடைய இருப்பினை தக்கவைக்க முடியும்.
கிழக்கு மாகண சபை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரதமர் கூறியதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன் கிழக்கு மாகாண சபையின் மக்கள் ஆணையினை பெற்ற இறுதி திகதி 10.01.2017 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
அதன் பின்னர் மீண்டும் ஒரு தேர்தலை வைத்து மக்கள் ஆணையை பெற்றே இந்த கிழக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அதனை விடுத்து கிழக்கு மாகாண சபையை நீடிப்பதனால் எந்த நன்மையும் கிடையாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறவில்லை அதன் காரணமாக இதனை மிக விரைவில் நடத்தி உள்ளூராட்சி உறுப்பினர்களை தெரிவு செய்து அந்த அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலமே பிரதேசம் செழிப்பாக இருக்கும்.
மட்டக்களப்பிற்கு பிரதமர் வருகை தந்து இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக அண்மையில் கோட்டல் ஒன்றில் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆனால் இந்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்படவில்லை.
உறுப்பினர்கள் எவரையும் உத்தியோக பூர்வமாக அழைக்கவில்லை என்பது மிகவும் மன வேதனை தரும் விடயம். இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலில் ஈடுபட்டிருக்கும் போது இந்த நாட்டின் பிரதமர் அபிவிருத்தி விடயம் சம்மந்தமாக பேசும் போது எம்மை அழைக்கவில்லை என்பது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தினை ஏற்பத்தியுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் பிரதம அதிதியாகவும் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், அனைத்து ஆலயங்களினதும் தர்மகர்த்தாக்கள் பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் துணிச்சலுடன் போராட வேண்டும்: பிரசன்னா இந்திரகுமார்.
Reviewed by Author
on
August 04, 2017
Rating:

No comments:
Post a Comment