அதிமுக-வில் பொதுச் செயலாளர் பதவி ரத்து..சசிகலா நீக்கம்? சட்ட விதிகளில் திருத்தம்.
அதிமுக பொதுச்செயலர் பதவியை ரத்து செய்துவிட்டு சசிகலாவை நீக்கும் முடிவை நாளைய நிர்வாகிகள் கூட்டம் மேற்கொள்ளக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடைந்து கிடக்கும் அதிமுக அணியில் பன்னீர் செல்வம் அணியும், எடப்பாடி அணியும் இணைந்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் அதில் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நாளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அதிமுகவின் சட்டதிட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிமுகவில் பொதுச்செயலர் என்ற பதவியை ரத்து செய்துவிட்டு வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைக்கும் வகையில் திருத்தம் அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அப்படி திருத்தப்படும் வழிகாட்டுதல் குழுவுக்கு பன்னீர் செல்வம் தலைவராகவும், பொதுச்செயலர் பதவியை ரத்து செய்வதுடன் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கும் முடிவையும் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பன்னீர் செல்வம் அணி தலைவர்களை திருப்திபடுத்தும் வகையில் கட்சி பதவிகள் வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்பதால் அதிமுக அணிகள் இணைப்பு சாத்தியமாகும் என்றே அனைவரும் கருதுகின்றனர்.
அதிமுக-வில் பொதுச் செயலாளர் பதவி ரத்து..சசிகலா நீக்கம்? சட்ட விதிகளில் திருத்தம்.
Reviewed by Author
on
August 21, 2017
Rating:
Reviewed by Author
on
August 21, 2017
Rating:


No comments:
Post a Comment