அவுஸ்திரேலிய தேர்தல் களத்தில் யாழ்ப்பாணத்து இளைஞர்!
அவுஸ்திரேலியாவில், பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் களமிறங்கவுள்ளார்.
யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
இறுதி யுத்த காலப்பகுதியான 2009இல் விடுதலைப்போராட்டம் தொடர்பாக அவுஸ்திரேலிய மக்களுக்கு கல்வி சார் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு “வாய்ஸ் ஒப் தமிழ்” என்னும் அமைப்பினை நிறுவியுள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் மனித உரிமை ஆர்வலராகவும், அவுஸ்திரேலியாவிற்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும் ஒரு முன்னணி செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் பசுமைக்கட்சியின் வேட்பாளராக சிட்னி தெற்கு பிராந்தியத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பிரோஸ்பெக்ட் (Prospect) தொகுதியில் தாம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மூன்று வருடத்துக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில் prospect தேர்தல் தொகுதியில் தமிழன் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
அவுஸ்திரேலிய தேர்தல் களத்தில் யாழ்ப்பாணத்து இளைஞர்!
Reviewed by Author
on
August 21, 2017
Rating:
Reviewed by Author
on
August 21, 2017
Rating:


No comments:
Post a Comment