யாழ் பொலிஸார் மீது வாள்வெட்டு : மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தோடு தொடர்புடைய 18 வயது இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை கடந்த நாட்களில் பொலிஸார் கைது செய்திருந்த வேளையிலேயே ஐந்தாம் சந்தேக நபரான 18 வயது இளைஞனை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நல்லூர் மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடைய 7 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில் இன்று வரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோரை கைது செய்வதற்கான விசாரணைகளையும் தேடல் நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் பொலிஸார் மீது வாள்வெட்டு : மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது
Reviewed by NEWMANNAR
on
August 05, 2017
Rating:

No comments:
Post a Comment